முத்தம் கொடுக்க மறுத்த காதலனுக்கு காதலி கொடுத்த அதிரும் தண்டனை!
காதலன் முத்தம் கொடுக்க மறுத்ததால், உடனடியாக காதலி அருகில் இருந்த நபர் ஒருவருக்கு முத்தம் கொடுத்தது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் கிஸ் கேம் என்னும் விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருவது வழக்கம்.
அப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என பலர் கூடியிருக்கும் இடத்தில் நடைபெறும்.
இது பெரிய திரையில் காண்பிக்கப்படும். திரையில் யார் காண்பிக்கப்படுகிறார்களோ அவர்கள் முத்தம் கொடுத்து கொள்ள வேண்டும்.
அது போன்ற நடந்த ஒரு போட்டியில் தான் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த ஜோடியின் வீடியோ திரையில் காண்பிக்கப்பட்டது.
மகிழ்ச்சியில் அந்த பெண் காதலனுக்கு முத்தம் கொடுக்க முற்பட, அந்த ஆண் முத்தம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் அவரது காதலி தனக்கு அருகில் இருந்த ஆணுக்கு முத்தம் கொடுத்துவிட்டார். அவ்வாறு முத்தம் கொடுத்ததும் அரங்கில் உள்ளவர்கள் அந்தப்பெண்ணை பார்த்து கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்