புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினருடன் இராணுவ கோப்ரலும் கைது: விளக்கமறியலில்
வெல்லவாய பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் இலங்கை இராணுவ கோப்ரலும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரில் குறித்த விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் உறுப்பினர் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவர் எனவும், 1998ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவில் கடமையாற்றி உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இவருக்கும் ராணுவ கோப்ரலுக்கும் என்ன தொடர்பு. ஏன் இவர்கள் மைத்திரி விஜயம் செய்ய உள்ள இடத்தில் ஒன்றாக சந்தித்தார்கள் என்ற சந்தேகங்கள் இருப்பதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டாலும். இவர்களின் விளக்க மறியலை நீடிக்குமாறு இன்று பொலிசார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்