கடந்த மாதம் மட்டும் தப்பியோடிய சிங்கள ராணுவத்தின் எண்ணிக்கை 1,500 என்கிறார்கள்
பாதுகாப்பு படைகளில் இருந்து உத்தியோக பூர்வ விடுமுறை இன்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினர் 1500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இனிமேல் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படமாட்டது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவை விலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் 01ம் திகதி அமுல்படுத்தப்பட்ட அதேவேளை டிசம்பர் மாதம் 31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.
அந்த தினத்தில் இருந்து இன்று வரையில் முப்படைகளை சேர்ந்த 1500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் இராணுவத்தை சேர்ந்த 3 உயர் அதிகாரிகளும் 1149 சாதாரண படை பிரிவினரும், கடற்படையை சேர்ந்த 327 படையினரும், விமானப்படையை சேர்ந்த 21 படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து குறித்த காலஎல்லை வரையில் உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத சுமார் 9000 முப்படையின் வீரர்கள் சட்டரீதியாக சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான அனுமதியினை பெற்றுள்ளனர். மொத்தத்தில் சுமார் 10,000 ராணுவச் சிப்பாய்கள் சில மாதங்களில் வேலையை விட்டு ஓடியுள்ளார்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்