சுவிசில் நடந்த பயங்கரம்! இதற்கு காரணம் இந்த போராட்ட களமா?
ஸ்விற்சர்லாந்தில் ஆளில்லா கட்டிடங்களில் தங்கியுள்ள மக்களை பொலிசார் காலி செய்ய சொன்னதால் மிகப்பெரிய போராட்டம் நடைப்பெற்றது.
ஸ்விற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் பல இடங்களில் ஆளில்லா கட்டிடங்கள் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியிருந்தனர்.
இவர்கள் அந்த இடத்தை விட்டு உடனே காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பொலிசார் அவர்களை அந்த இடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.
இதை கண்டிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய இரயில் நிலையம் இருக்கும் சாலையில் சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தை கலைக்க முயன்ற பொலிசார் மீது அவர்கள் கல்வீசியும், நெருப்பை கொளுத்தி போட்டும் தாக்குதல்கள் நடத்தினார்கள்.
இதில் பத்துக்கும் மேற்ப்பட்ட பொலிசார் காயம் அடைந்தார்கள். இந்த போராட்டத்தில் மத்திய ரயில்வேக்கு சொந்தமான ஒரு டிரக் வண்டி தீயிட்டு கொளுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற போராட்டம் ஏற்கனவே சிலமுறை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்