மோபைல் போன் மாடலில் வாக்குவாதம்: இதனால் கொலை எங்கே செல்கிறது அமெரிக்கா ?
அமெரிக்காவில் யார் வேண்டும் என்றாலும் துப்பாக்கியை வாங்கலாம் என்ற சட்டம் உள்ளது. எந்திர துப்பாக்கி முதல் கொண்டு, அதி நவீன பிஸ்டல் வரை எந்த ஒரு ஆயுதமும் கடையில் கிடைக்கும். சமீபத்தில் வெளியான CCTV கமரா பதிவு பலரை உலுக்கியுள்ளது. 2 பிள்ளைகளின் தகப்பன் நடு வீதியில் வைத்து சுட்டுக் கொலை. அவர் தனக்கு தெரிந்த நபரோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். முதலில் தன்னிடம் இருக்கும் பிஸ்டலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு, மற்ற நபரை அவர் அச்சுறுத்துகிறார்.
ஆனால் அன் நபரிடமும் ஒரு கை துப்பாக்கி உள்ளது என்பது இவருக்கு தெரியாது. இன் நிலையில் இவர் தனது கை துப்பாகியை உள்ளே வைக்க. உடனே அவர் தனது கை துப்பாக்கியை எடுத்து பல தடவை சுட்டு விட்டு தப்பி ஓடுகிறார். தனக்கு சூடு விழும்போது ஓடிய அன் நபர். இறுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துபோகும் காட்சிகளே இவை. அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்சனை என்று கேட்டால் நீங்கள் அதிர்ந்து போய் விடுவீர்கள். அது என்னவென்றால் மோபைல் போன் மாடல் குறித்த சர்சை தான். அது தகறாறாக முற்றி இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்