விஜய் மல்லையா லண்டனில்தான் இருக்கிறாரா ? இவரை நாடுகடத்த போகிறார்கள்! எப்படி ?
பல கோடி ரூபாய்களை வங்கிகளில் கடனாக பெற்று லண்டனில் தலைமறைவாகியிருக்கும் விஜய் மல்லையா பற்றி இந்திய அமைச்சர் பேசியுள்ளார்.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை கடனாக வாங்கினார்.
கடனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி சென்று அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், லண்டன் நகருக்கு சுற்றுபயணம் செய்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அங்கு விழாவில் மல்லையா குறித்து மறைமுகமாக பேசுகையில், உங்களில் பலர் வங்கிகளில் கடன் வாங்கும்போது அந்த பணத்தை திருப்பிச்செலுத்த தேவையில்லை என்று லண்டனுக்கு வருகிறீர்கள்.
வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களை இங்கே தங்கிக்கொள்ள அனுமதிக்கிற வகையில் இங்கே ஜனநாயகம் தாராளமானதாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரம் குறித்தும் பேசும் திட்டம் உள்ளதா? என்பதை உறுதி செய்ய அருண் ஜெட்லி மறுத்து விட்டார்.
மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று பிரித்தானியா அரசிடம் இந்திய அரசு முறைப்படி வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்