ஆவா குழு இன்னும் இயங்குகிறது: இரவில் நடந்த சேட்டையின் புகைப்படம் இதோ
யாழ். அரசடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு, வாள்வெட்டுத் தாக்குதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 மோட்டார் சைக்கிளில் வந்த, 8 பேர் கொண்ட குழுவினர், அரசடி பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு பெற்றோல் குண்டு வீசியதுடன், அங்கிருந்தோரையும் வாளால் வெட்டியுள்ளனர். இவர்கள் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவருகிறது.
இன்னும் இவர்கள் யாழில் இயங்கிய வண்ணமே உள்ளார்கள். காசைக் கொடுத்தால், இவர்கள் யாரையும் வெட்டுவார்கள். எந்த இடத்தையும் கொழுத்துவார்கள். பெற்றோல் குண்டுகள் மற்றும் வாள் சகிதம் இவர்கள் மோட்டார் சைக்கிளில் திரிகிறார்கள். ஆனால் பொலிசாரின் கண்ணில் இவர்கள் அகப்படவில்லை என்று கூறுவதை நம்பவே முடியாது.
இவர்களுக்கு பின்னணியில் பொலிசாரும் இலங்கை புலனாய்வுக் குழுவுமே இருக்கிறது. யாழில் ராணுவம் மற்றும் சிங்கள பொலிசார் ஏன் நிலைகொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தால். இது போன்ற குழுக்கள் பரவாமல் இருக்கவேண்டும் அல்லவா ? என்று ஒரே சொல்லி சொல்லி கேள்வி கேட்ப்போரின் வாயை அடைத்துவிடலாம் அல்லவா.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்