ஏறாவூரில் மீட்கப்பட்ட ஆயுதம் - ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்தா ? மைத்திரி தரப்பு
ஏறாவூரில் முஸ்லீம் குடும்பஸ்தரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பாக கிழக்கில் முஸ்லீம் தீவிரவாதம் உள்ளமை தொடர்பான சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதப்படுகின்றது. இதன் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் இரத்துச்செய்யப்படவோ அல்லது மட்டுப்படுத்தப்படவோ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்புக்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்க செங்கலடி ஏறாவூர் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விஜயம் செய்து பல அபிவிருத்தி திட்டங்களையும் கட்டிடங்களையும் திறந்துவைக்கவுள்ளார்.
ஆனால் குறித்த விஜயம் நேற்றையதினம் ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதமும் அதன் பின்னனியில் உள்ள ஆபத்து தொடர்பாகவும் இரத்துச்செய்யப்படவோ அல்லது செங்கலடி ஏறாவூர் போன்ற பகுதிகளுக்கான விஜயம் மட்டுப்படுத்தப்படவோ வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏறாவூர் சவுக்கடி காட்டிற்குள் குடும்பஸ்தர் ஒருவரினால் கொண்டு சென்று போடப்பட்ட ஏ.கே.57 ரக ஆயுதம் இயங்கு நிலையில் காணப்பட்டதுடன் குறித்த ஆயுதத்தை கொண்டு சென்று பற்றைக்காட்டிற்குள் வீசிய முஸ்லீம் குடும்பஸ்தரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்