லண்டம் M62 பொலிசார் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்கள்: இறந்தவர் முஸ்லீன் என்கிறார்கள்
லண்டனில் இருந்து புறநகர் செல்லும் M62 நெடுஞ்சாலையில், துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பொலிசார் சுட்டதில் யசார் என்னும் முஸ்லீம் நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அங்கே என்ன நடந்தது என்பது போன்ற விபரங்களை அவர்கள் வெளியிட மறுத்துவிட்டார்கள்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் , அவர்கள் ஒரு காரை மோட்டர் வேயில்(நெடுஞ்சாலையுல்) துரத்தியுள்ளார்கள். இதனை அடுத்து அவர்களுக்கு உதவி புரிய ஆயுதப் பொலிசார் வேண்டும் என்ற கோரிக்கை சாதாரண பொலிசாரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றவேளை.
அவர்கள் குறித்த காரை மடக்கி நிறுத்தியுள்ளார்கள். இருப்பினும் பொலிசார் உடனே அவரை நோக்கி சுட்டதில் அன் நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மெற்றோ பொலிடன் பொலிசார் இது குறித்து எதனையும் கூற மறுத்துவரும் நிலையில். இறந்து போன நபர் ஒரு சாதரண நபர் என்பது தெரியவந்துள்ளது. அவரது ஏராளமான நண்பர்கள் முக நூலில் அவருக்காக வருத்தம் தெரிவித்து வரும் நிலையில். பொலிசார் ஏன் சுட்டார்கள் என்பதனை அவர்கள் இதுவரை உறுதிசெய்ய மறுத்து வருகிறார்கள். இது மேலும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்