Header Ads

சிரியா துருக்கி விமானப்படைகள் அதிரடி தாக்குதல், ஐ.எஸ். தீவிரவாதிகள் சம்பவ இடத்தில் சரமாரியாக பலி

சிரியாவின் அல்-பாப் நகரின் அருகே துருக்கி விமானப்படைகள் பொழிந்த குண்டுமழையில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகினர். சிரியா: துருக்கி விமானப்படைகள் குண்டுமழையில் 18 ஐ.எஸ். 

தீவிரவாதிகள் பலி டமாஸ்கஸ்: சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. 

இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. சிரியா எல்லையோரம் உள்ள துருக்கி நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளின் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


 இதற்கு பதிலடியாக சிரியா நாட்டுக்குள் அவர்கள் பதுங்கியுள்ள இடங்களை குறிவைத்து துருக்கி நாட்டு விமானப்படையும் தாக்கி வருகிறது. அவ்வகையில், சிரியாவில் அல்-பாப் நகருக்கு அருகாமையில் உள்ள டைர் கக் உட்பட்ட பகுதிகளில் போர் விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 18 பேர் பலியானதாக துருக்கி அரசு இன்று அறிவித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.