இதுவரை அனுப்பாத நவீன போர் கப்பலை ரஷ்யா நோக்கி நகர்த்தியது பிரித்தானியா
2ம் உலகப் போருக்கு பின்னர் இதுவரை நகர்த்தாத அதி நவீன ரக நாசகார கப்பலை பிரித்தானியா ரஷ்யா நோக்கி நகர்த்தியுள்ளது. HMஸ் டைமன் என்று அழைக்கப்படும் டைப்- 45 ரக கப்பலே இதுவாகும். இதில் விமான அழிப்பு ஏவுகணைகள். கடலில் இருந்து கடலை நோக்கி ஏவக்கூடிய ட்ரோபிடோக்கள். பிற கப்பலை தாக்கி அழிக்க கூடிய துல்லிய ஏவுகணைகள் உள்ளது. இதனை யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு அனுப்பி, கருங்கடல் பகுதியில் நிலைகொள்ள வைத்துள்ளது பிரித்தானியா.
ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதியைப் பார்க்கும் எல்லைப்புற பகுதி அனைத்திலும், நேட்டோ நாட்டுப் படைகள் தமது படை அணிகளை நிறுத்தி. ரஷ்யாவை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ரஷ்யா ஐரோப்பிய நகரங்களை தாக்கினால். அதற்கு ஆயுத சப்பிளை அவசியம். ஆனால் ஆயுதம் செல்லும் வழிகளை அடைத்துவைத்திருக்கும் ஒரு நடவடிக்கையே இதுவாக உள்ளது. இதனால் நாளுக்கு நாள் ரஷ்யா பக்கமாக தனது படைகளை பல ஐரோப்பிய நாடுகள் நகர்த்தி வருகிறது.
இதன் காரணமாக ரஷ்யா மேலும் ஆத்திரமடைந்து வருகிறது. இந்த ராணுவ நகர்வுகள் எங்கே கொண்டு செல்லப்போகிறது என்பது தெரியவில்லை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்