மேன்செஸ்டரில் முள்ளை போடும் கம்பெனி: உறங்க கூடாது என்று இப்படி செய்கிறார்கள்
பிரித்தானியாவின் மேன்செஸ்டர் நகரில் உள்ள பல கம்பெனிகள். தமது வழாகத்தை சுற்றி முள்ளு இரும்புகளை நிலத்தில் பதித்து வருகிறார்கள். இது எதற்காக என்று தெரியாமல் சிலகாலமாக மக்கள் குழம்பி வந்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால். வீடு இல்லாமல் தெருவில் படுத்து உறங்கும் நபர்களை குறிவைத்தே இவ்வாறு இந்த கம்பெனிகள் செய்து வருவதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.
இதனூடாக வீடு இல்லாத நபர்கள், தமது கம்பெனியின் வழாகத்தில் படுத்து உறங்க முடியாத வகையில் நிலத்தில் முள்ளு போன்ற வடிவில் உடைய இருப்பு படலங்களை அவர்கள் போட்டு வருகிறார்கள். மனித உரிமை அமைப்புகள் இதற்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள போதும். கவுன்சில் இது தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல், மெளனம் காத்து வருகிறது. இது பெரும் ஆச்சரியம் தருவதாக மனித உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்