ரவிராஜை போட்டுத்தள்ளியது கருணாவா ? வெடித்ததுபுதிய உண்மைகள்
ரவிராஜை படையினரை வைத்து கொலை செய்தது யார் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி அவர் இந்த கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டில் தற்போது தவறு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டும்.
இதே முன்னைய ஆட்சியாக இருந்தால் யாரும் விளக்கமறியலில் வைக்கப்பட மாட்டார்கள், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் நாம் யாரையும் காணாமல் போக செய்வதில்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம்,
நடராஜா ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை யார் படுகொலை செய்தது? ரவிராஜை படையினரை வைத்து கொலை செய்தது யார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதன்போது அமைச்சரின் கருத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குழப்பமும் விளைவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்