யாழில் கற்பிணிப் பெண்ணை போட்டுத்தள்ள மாஸ்டர் பிளான் பண்ணிய கொலைகாரன் இவனா ?
யாழ். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் முஸ்லிம் இளைஞன் ஒருவரை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.
முச்சக்கரவண்டியொன்றில் தனித்திருந்த குறித்த பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவர் மீது குறித்த இளைஞனும் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை இடம்பெற்ற போது யாழ். ஐந்து சந்திப்பகுதியைத் தற்காலிக வசிப்பிடமாகவும்,
புத்தளத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் பரீன் (வயது-33) என்பவர் அப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது பொலிஸார் குறித்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மேலும் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இந்நபர் ஊர்காவற்துறைப் பகுதியில் இடம்பெற்ற மாடுகள் திருட்டுச் சம்பவத்துடனும் தொடர்புபட்டுள்ளார்.
இவருக்கு முன்னாள் மாநகர சபை முஸ்லிம் உறுப்பினர்கள்,
தற்போதைய வடக்கு மாகாண சபை உறுப்பினரொருவர் ஆகியோர் அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இது தவிர யாழிற்கு புத்தளத்திலிருந்து போதைப்பொருட்களை கடத்தி விநியோகம் செய்யும் முகவராகவும் இவர் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதேவேளை,
ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்படும் சகோதரர்களான வட்டுக்கோட்டை பழைய நீதிமன்றத்தடி கரம்பகம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துஷியந்திரன் , நாகேந்திரன் துஷியந்தன் ஆகியயோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்