டில்லில் நின்றவரை கொடூரமாக தாக்கிய நபர்கள்: அதிர்ச்சி காணொளி இணைப்பு
விற்பனை நிலையமொன்றினுள் நுழைந்து அங்கு காசாளரை கொடூரமாக தாக்கி மரண அச்சுறுத்தல் விடுத்த ஐந்தாயிரம் ரூபாவினை கோரும் காட்சி அடங்கிய காணொளியொன்று இணைத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மாத்தறை பேரூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் , குறித்த சந்தர்ப்பத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் அங்கு இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது , குறித்த கொள்ளையர்கள் காசாளரை கத்தியை கொண்டு அச்சுறுத்தும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ,
சந்தேகநபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் வௌியாகியுள்ள குறித்த காணொளி கீழே...

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்