இந்தியரை அடித்தே கொன்ற நபருக்கு வெறும் 32 மாத சிறை தண்டனை- அதிரும் பிரித்தானியா
பிரித்தானியாவில் அயர்லாந்தில் உள்ள மிருச்சி மசாலா என்னும் இந்திய உணவகத்தில் நடந்த கொலை, பலரை அதிர்சியில் ஆழ்த்தியது. ஆனால் அதிலும் பார்க்க பன் மடங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது மிருச்சி மசாலாவில் வேலை பார்த்த இந்திய வம்சாவழி முஸ்லீம் நபர் ஒருவரை, உணவக உரிமையாளர் அடித்துக் கொலை செய்தார். தந்தூரி சிக்கன் எப்படி செய்வது என்ற தகறாறு காரணமாகவே அவரை முதலாளி தாக்கி, தலையில் அடித்தார்.
இதனால் 56 வயதுடைய ஷா என்னும் நபர் இறந்து போனார். ஆனால் அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருப்பதாகவும். அதன் காரணமாக தான் அவர் இறந்தார் என்றும் வக்கீல் கூறியுள்ளார். மேலும் அடித்தவருக்கு அவருக்கு இருதய நோய் இருக்கும் விடையம் தெரியாது எனவும். எனவே அவர் ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டதாகவும் குறித்த வக்கீல் வாதாடி. 3 வருடங்களுக்கும் குறைவான தண்டனையை பெற்றுகொடுத்துள்ளார்.
இதனை ஆங்கில இணையத்தில் வாசித்த பல வெள்ளைக்காரர்களே அதிர்ந்து போனார்கள். கொலைக் குற்றத்திற்கு ஆகக் குறைந்த தண்டனையே 5 வருடம் ஆகும். ஆனால் இவருக்கு நீதிபதி எவ்வாறு , 32 மாதம் கொடுத்தார் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். பிரித்தானியாவில் தற்போது கொலை கூட மலிந்துவிட்டது போங்கள்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்