தந்தூரி சிக்கன் செய்வது எப்படி என்ற தகறாறில் அடித்தே கொலை செய்த மேனேஜர்
அட இதுக்கு எல்லாமா போய் கொலை செய்வார்கள் என்று கேட்டு நீங்களே அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுவீர்கள் போங்கள். லண்டனில் உணவகத்தை நடத்திவந்த ஹைடைட் எஸ்டோன் என்னும் நபர், பாக்கிஸ்தானில் இருந்து லண்டன் வந்து சமையல் காரராக வேலை செய்த நபரை அடித்தே கொலை செய்துள்ளார். சம்பவ தினத்தன்று கொல்லப்பட்ட நபரான ஷா, தந்தூரி சிக்கன் ஒன்றை சமைத்து உணவகத்திற்கு வந்த நபருக்கு பரிமாற முனைந்தவேளை.
தந்தூரி சிக்கனை இப்படி செய்யக் கூடாது என்றும், இதுவா தந்தூசி சிக்கன் என்று கேட்டும் மேனேஜர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியாக வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது சமையல் காரரின் முகத்தில் ஓங்கி பல தடவை குத்தியுள்ளார். இதனால் மூளையில் ரத்தம் கட்டி மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டு சமையல் காரர் இறந்துபோய்விட்டார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்