Header Ads

ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை



சர்­வ­தேச விமான நிலை­ய­மொன் றின் கத­வு­களை உடைத்­து­க்கொண்டு கார் ஒன்று வேக­மாக விமான நிலை­யத்­துக்குள் நுழைந்த சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. கஸாந் நக­ரி­லுள்ள கஸான் சர்­வ­தேச விமான நிலை­யத்தின் கண்­ணாடி கத­வு­களை தகர்த்­துக்­கொண்டு இக்கார் உள்ளே நுழைந்­தமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

விமான நிலைய கட்­ட­டத்­துக்குள் நுழைந்­த­வுடன் கார் நிறுத்­தப்­ப­ட­வில்லை. அந்­நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்­டி­ருந்தார்.பின்னர் விமான நிலை­யத்­தி­லி­ருந்து பய­ணிகள் வெளி­யேறும் பகு­தியின் கத­வையும் அக்கார் தகர்த்­தது. அவ்­வே­ளையில் பொலி­ஸாரால் அக்­காரை வழி­ம­றித்து நிறுத்த முடிந்­தது.அதன்பின் காரின் சார­தி­யான ரஸ்லன் நுர்ட்­டின்வோ (40) கைது செய்­யப்­பட்டார். அவர் மது போதையில் இருந்தார் என ரஷ்ய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்­பாக நீதி­மன்றில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, தனது காதலி உள்ளூர் ரயில் நிலை­யத்தை வந்­த­டை­ய­வி­ருந்­த­தா­கவும் அவரை வர­வேற்­ப­தற்குச் செல்­வ­தற்­காக விமான நிலை­யத்­துக்கு ஊடாக தான் காரை செலுத்­தி­ய­தா­கவும் கூறி­னாராம். மேற்­படி சம்­ப­வத்தால் எவரும் காய­ம­டை­ய­வில்லை. ஆனால், நீர்­வி­நி­யோக குழாய் உடைந்­ததால் கட்­ட­டத்­துக்குள் தண்ணீர் வழிந்­தோடி வெள்ளம் ஏற்­படத் தொடங்­கி­யது.ரஸ்லன் நுர்ட்­டின்­வோ­வுக்கு 15 நாள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை, கட்டடங் களை சேதப்படுத்தியமை தொடர்பாக மேலும் இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.