Header Ads

33,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்து உயிர் தப்பிய பெண் இவர்



33,000 அடி (10,000 மீற்றர்) உய­ரத்தில் பறந்து கொண்­டி­ருந்த விமா­னத்­தி­லி­ருந்து உயிர் தப்பி, 44 வரு­டங்கள் உயிர்­வாழ்ந்த பெண்­ணொ­ருவர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளார்.  சேர்­பி­யாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்­ப­வரே இப்­பெண்­ணாவார். மேற்­படி அனர்த்­தத்தில் ஆச்­ச­ரி­ய­க­ர­மாக உயிர்­தப்­பிய அவர் தனது 66 வயதில் இறந்­துள்ளார்.

1972 ஜன­வரி 26 ஆம் திகதி மேற்­படி விமான அனர்த்தம் இடம்­பெற்­றது.  அப்­போது 23 வயது யுவ­தி­யாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூகோஸ்­லா­வி­யாவின் (சேர்­பியா, பொஸ்­னியா, குரோ­ஷியா உட்­பட பல குடி­ய­ர­சுகள் ஒன்­றி­ணைந்த நாடு) விமான சேவை நிறு­வ­ன­மான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தில் விமானப் பணிப்­பெண்­ணாக பணியாற்­றி ­வந்தார். 1972 ஜன­வரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் டக்ளஸ் டி.சி 9 விமா­ன­மொன்றில் வெஸ்னா  வுலோவிக் பணியில் இருந்தார்.

அவ்­வி­மானம் சுவீ­டனின் ஸ்டொக்ஹோம் நக­ரி­லி­ருந்து புறப்­பட்டு டென்­மார்க்கின் கொப்­பன்­ஹேகன் நகரில் தரை­யி­றங்­கிய பின் யூகோஸ்­லா­வி­யாவின் தலை­நகர் பெல்­கி­ரேட்டை நோக்கிப் புறப்­பட்­டது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.