Header Ads

லண்டனில் உங்கல் கார்களுக்கும் இப்படி நடக்கலாம் தமிழர்களே ஜாக்கிரதை



லண்டன் நியூ- ஹாம் நகரில் உள்ள வீதி ஒன்றில் , மேசைடீஸ் காரை ஓட்டி வந்த ஒருவர் தனது காரை சரியான இடத்தில் பார்க் செய்துவிட்டு சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது அவரது காரை காணவில்லை. அருகில் உள்ள அறிவிப்பு பலகையை பார்த்தால் அன்றைய தினம் அந்த இடத்தில் காரை பார்க் செய்ய கூடாது என்று போடப்பட்டு இருந்தது. அதனை பார்த்து அவர் அதிர்ந்து போனது மட்டும் அல்ல குழம்பிப் போய் விட்டார். காரணம் என்னவென்றால் குறித்த அந்த நாளில் அங்கே காரை பார்க் செய்ய முடியும் என்று முன்னர் அறிவிப்பு பலகையில் இருந்தது. ஆனால் தற்போது பார்த்தால் அப்படி பார்க் செய்ய முடியாது என்று இருந்தது.

இருப்பினும் அவர் கவுன்சிலுக்கு அழைப்பு விடுக்க, அவரது காரை தாம் தூக்கிச் சென்றுவிட்டதாக வாகன பிரிவு தெரிவித்தது. அவர் பெரும் பணத்தை கட்டி காரை மீட்டு வந்தார். ஆனால் அவர் சந்தேகம் அவரை விடவில்லை. இறுதியாக அவர் ஒருவிடையத்தை நினைவு கூர்ந்தார். அங்கே ஒரு CCTV கமரா இருப்பதை அவர் நினைவு படுத்தி. குறித்த CCTV மகரா வீடியோவை பெற்று பார்த்தார். அவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

ஏன் எனில் துண்டு வைக்கும் வாடன், அங்கே வந்து முதலில் அறிவிப்பு பலகையில் உள்ள தேதியை மாற்றிவிட்டு. பின்னர் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு தண்டப் பணத்திற்கான துண்டை வைக்கிறார். பின்னர் போன் செய்து வாகனத்தை அகற்றும் பிரிவுக்கு தொடர்புகொண்டு. வாகனத்தை அகற்றுமாறு கூறுகிறார். இவை அனைத்துமே கள்ளம் தான். தற்போது குறித்த காரை ஓட்டிய நபர் நியூ ஹாம் கவுன்சிலுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளார்.


No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.