ஒரு ஆம்பளையாவது கூட்டிட்டு வாடா..ஆர்யா
சினிமாவில் திடீரென்று பிரவேசித்து புகழின் உச்சிக்குப் போனவர் ஆர்யா.
தமிழ் தவிர தெலுகு மலையாளம் என நடித்து இளசுகளின் பாப்புலர். சாய்ஸ் ஆனார் இவர்.
கொஞ்ச நாள் முன்புவரை இண்டஸ்ட்ரியில் பரபரத்துக் கொண்டிருந்தவர் சமீப காலமாக இவர் ஃபேட் அவுட் ஆகிக் கொண்டிருப்பது ஊரறிந்த ரகசியம்.’கொம்பன்’ உட்பட ஒரிரு ப்ராஜெக்ட்கள் மட்டும் இன்று இவர் கையில்.
என்ன ஆச்சு இவருக்கு?
இது பற்றி கோலிவுட் சுற்று வட்டாரத்தில் கசியும் செய்திகள் அவர் பற்றின கவலையுடன் வலம் வருகின்றன. காரியம் ஆகிறவரை காலை பிடிப்பார். வேலை முடிந்ததும் தூக்கி எறிந்து விடுவார். ஹீரோயின்களிடம் இவரின் ஓவர் நெருக்கம்! தொழில் மீது இருக்க வேண்டிய நெருக்கத்தைவிட அது அதிகமாக இருந்தது. இது பத்திரிக்கைகளில் ஓவராக அடிபட்டது.அவர்களும் பின்னாளில் இவரை விட்டு ஏதாவது காரணம் சொல்லி விலக ஆரம்பித்தனர்.. அனுஷ்கா , நயன்தாரா போன்றவர்கள் இதற்கு உதாரணம்.
சினிமாவைத் தாண்டி இவரின் நெருக்கம் சமுதாயத்தில் பல குடும்பத்தினரிடம் ஊடுருவியது. அதனால் பல விதமாக பலன் பெற்றார் என ஊடகங்கள் கிசு கிசுவாக எழுதத் தொடங்கின. இவரும் விஷாலும் நண்பர்கள். பல ஆண்டுகளாக அது தொடர்கிறது. விளையாட்டுக்கு சொன்னாரோ சீரியஸ்ஸாக சொன்னாரோ பொண்ணு கிடைக்கலைன்னா பேசாம விஷாலையே கல்யாணம் பண்ணிக்கப் போறேன்’- என்று இவர் பேச.. இதை வைத்து செய்திகள் வளைய வர ஆரம்பித்தன.
இப்போது அது இப்படி பேட்டி வரை வந்து நிற்கிறது.
"
உங்க கல்யாணம் எப்போ பாஸ்ன்னு சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டதுக்கு,’ வீட்டில பாரின் மாதிரி ஒரு ஆம்பளையாவது கூட்டிட்டு வாடா…கல்யாணம் பண்ணி வைக்கிறோம்ன்னு சொல்லுறாங்க பாஸ். ஆனா, நமக்கு லவ் மேரேஜ் தான் பாஸ்." என்று கலகலத்து உள்ளார். இதை கேட்டு ரசிகர்கள் இல்ல…கலகலத்து போய் இருக்காங்க…ஆர்யா பாஸ்…

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்