ஜா-எல கணுவனயில் ஹெரோயினுடன் கைதான நபரிடமிருந்து ஆயுதங்கள் மீட்பு
ஜா-எல கணுவன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு தெற்கு பிராந்திய சட்ட அமுலாக்கல் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு தெற்கு பிராந்திய சட்ட அமுலாக்க பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 26 கிராமும் 150 மில்லி ஹெரோயினை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அச்சந்தேக நபர் பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளிலிருந்து வெளிநாட்டு தயாரிப்பான 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கிகள் இரண்டு, 9 மில்லிமீற்றர் ரகத்தை சார்ந்த 50 ரவைகள் மற்றும் கூரிய கத்தியொன்றினையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்துடன் இச்சந்தேகநபரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் மூலம் இவர் 2009 ஆம் ஆண்டில் தலங்கம பகுதியில் இடம்பெற்ற கொலை ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்தவெரென உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர் நேற்று முன்தினம் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 7 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு தெற்கு பிராந்திய சட்ட அமுலாக்கல் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்