யாழில் பொலிசாருக்கு கெளரவிப்பு என்று கூறி சிங்கள பொலிசாரை கெளரவித்தனர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (30) புதன்கிழமை அன்று நடைபெற்றது. யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண மற்றும் யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கலந்துகொண்டதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.
ஆனால் என்ன விடையம் என்றால் , இதில் 90 சதவிகிதமானவர்கள் சிங்களப் பொலிசாரே. இவர்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கெளரவித்துள்ளார்கள். இது தான் ஒட்டு மொத்தத்தில் நடந்து முடிந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்