வீட்டு உரிமையாளரை ஒரு தனது காதலனுடன் சேர்ந்து கொலை..! விபச்சாரி என திட்டியதால்
விபச்சாரி என திட்டியதால் வீட்டு உரிமையாளரை ஒரு பெண் தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு, மக்கீஸ் கார்டன் குடிசை பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் தனலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியப்போது,அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சுகந்தி என்ற இளம்பெண் மீது சந்தேகமடைந்தனர்.
போலீஸாரின் கேள்விகளுக்கு முரண்பாடாக பதிலளித்த சுகந்தி, கடைசியில் தனலட்சுமியை தனது காதலன் யுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சுகந்தியையும், அவரது காதலனையும் போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து வாக்குமூலம் அளித்த சுகந்தி, என் கணவன் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் பிழைப்புக்காக வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்தேன். அடிக்கடி என் வீட்டிற்கு ஆண்கள் வருவதை அறிந்த தனலட்சுமி, என்னை விபச்சாரி என திட்டி அசிங்கப்படுத்தினார்.
மேலும் இனி வீட்டிற்கு எந்த ஆண்ணும் வரக்கூடாது என கூறிவிட்டார், இதனால் விபச்சாரத் தொழில் பாதிக்கப்பட்டதால், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டேன்.
மேலும் வீட்டு வாடகையை கொடுக்காததால், வீட்டை காலி செய்யுமாறு தனலட்சுமி நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால் தண்ணீர் கேன் போடும் போது பழக்கமான என் காதலன் யுவனுடன் சேர்ந்து தனலட்சுமியை கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை எரித்தோம். ஆனால் இப்போது மாட்டிக் கொண்டோம் என சுகந்தி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்