Header Ads

திருமணம் செய்யக் கோரிய காதலி காரை ஏற்றி கொலை..!


வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. கடந்த 30 ஆம் தேதி கார் இடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மரணம் இயற்கையானது அல்ல கொலை என்ற சந்தேகம் எழுந்ததையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அவரது செல்போனை ஆய்வு செய்த போது, வன்னிமேடு ஊராட்சியின் முன்னாள் தலைவரின் மகன் நிலவுராஜனுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, இருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது தெரியவந்தது.

திருமணம் செய்யக் கோரி சாந்தி வலியுறுத்தியதால் அவரை நிலவு ராஜன் காரை ஏற்றி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவு ராஜனுக்கு வயது 24. சித்தூரில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்தச் சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.