Header Ads

சொந்த தொழிலில் முன்னேறிய பீரிசன் அவுஸ்திரேலியா பாராட்டு தெரிவிப்பு



அவுஸ்திரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்துக்கோரிய நிலையில், அதில் தோல்வியை கண்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர். இன்று சொந்த தொழிலில் சிறப்பாக வாழ்ந்துவருவதாக த ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு ஒன்றின்மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்சென்ற மார்க்கஸ் பிரீசன் என்பவருக்கு இந்த வாழ்க்கை வாய்த்திருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இவருக்கு அங்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. முயற்சியில்தோல்விக்கண்டார். இதனையடுத்து நாடு திரும்ப இணங்கினார்.

தமது சொந்த விருப்பத்தின்பேரில் நாடு திரும்பிய இவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, 5000 டொலர்களை வழங்கியது. இதனை ஆதாரமாக வைத்து அவர் படகு ஒன்றை வாங்கி வியாபாரம் செய்து. தற்போது மேலும் பல படகுகளை வாங்கி விற்று வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு விடையம் மட்டும் சிறப்பாக புரிகிறது. அதாவது அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர்களை கலைக்க , இவ்வாறு கூறுகிறார்கள். ஆசை காட்டுகிறார்கள் என்பது புரிகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.