14 வயது சிறுமியை கோடாரியால் சராமாரியாக வெட்டி கொலை..!?
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் அருகே உள்ள டிலோன்டா கிராமத்தை சேர்ந்த நிலேஷ் கர்ப்பாடா (19) என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
வாலிபர் ஒரு நாள் சிறுமியிடம் சென்று தன்னோட காதலை ஏற்றுக்கொள்ளும்படி வலியுயுத்தியுள்ளார். ஆனால் சிறுமி அந்த வாலிபரை நிராகரித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் சிறுமியை கொலை செய்ய திட்டமிட்டார்.
இந்நிலையில், ஒருநாள் சிறுமி கிராமத்தின் அருகேயுள்ள சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். இதனை கண்ட நிலேஷ் அவரை வழிமறித்து கோடாரியால் சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் சிறுமி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பலியானார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்