Header Ads

ஓபாமா தனது பதவிக் காலத்திற்கு பின் லண்டனில் ?



அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தனது பதவி காலம் முடிவடைந்த பிறகு பிரித்தானிய நாட்டில் குடியேறி பிரதமர் பதவி வகிக்க வேண்டும் என அந்நாட்டு குடிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ஆதரவும் பலத்த எதிர்ப்புகளும் கிளிம்பி வருகின்றன.இதே சூழ்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா நிரந்தரமாக வெளியாவதற்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவால் பிரித்தானிய நாட்டில் அசாத்தியமான சூழல் நிலவி வருவதால் அந்நாட்டு குடிமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 

இக்குழப்பத்தில் இருந்து விடுப்படுவதற்கும் எதிர்கால பிரித்தானியா சிறப்பாக இயங்கவும் அந்நாட்டு குடிமக்கள் சமூக வலைத்தளங்களில் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதில், ‘அமெரிக்காவில் ஒபாமாவிற்கு பதவி காலம் முடிவடைவதால் அவர் பிரித்தானிய நாட்டில் குடியேறி பிரதமராக வேண்டும்’ என சிலர் பதிவு வெளியிட்டுள்ளனர்.

‘ஒபாமாவை பிரித்தானிய நாட்டிற்கு கொண்டு வர அனைவரும் கையெழுத்து மனுவை தொடங்கலாமா?’ என சிலர் ஆலோசனை கேட்டுள்ளனர்.பிரித்தானிய நாட்டில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவால் முடியும். இதனை செயல்படுத்த பிரித்தானிய குடிமக்கள் அனைவரும் ஓரணியில் இணைவார்களா?’ என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.