Header Ads

செல்வந்தர் பிச்சைக்காரணிடம் சென்று பணம் பெற்ற சம்பவம்




டெல்லியை சேர்ந்த மிகப்பெரிய கோடீசுவரர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பெங்களூருவில் உள்ள பிச்சைக்காரரிடம் சென்று தனது ரூ.2.5 லட்சத்தை கொடுத்து 90 ஆயிரம் சில்லரை பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் இவருக்கு இந்தியா முழுவதும் ஓட்டல், தொழிற்சாலைகள் பல உள்ளன. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐரோப்பிய கம்பெனியை சீரமைக்க உறுதிமொழி அளித்திருந்தார். இதற்காக அதிக ஊழியர்களை நியமித்து கம்பெனியை சீரமைத்தார்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் புதன்கிழமை தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக இருந்தார். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் அவர் கையில் இருந்தது. இந்த பணம் செல்லாது காரணத்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலை உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் 3 லட்சத்துக்கு மேல் இருந்தன. இந்த பணத்தை தொழிலாளர்கள் வாங்க முன்வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.

அப்போது பிச்சைக்காரரின் உதவியை நாடி சென்று அவரிடம் 2.5 லட்சத்தை கொடுத்து ரூ.90 ஆயிரம் சில்லறை பெற்று வந்து தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுத்தார். இந்த சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.