பாரிய விபச்சார மோசடி எல்லாம் வெளிநாட்டுப் பெண்கள்
உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் பெண்கள் சிலர் இந்த நாட்டில் தங்கியிருந்து திட்டமிட்டு, விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகி இருந்தது. கொழும்பில் உலாவும் வாடகை வாகன சாரதிகளுடன் நட்பு கொண்டுள்ள அந்த பெண்கள், குறித்த சாரதிகளின் ஊடாக விபச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களை கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி குடிவரவு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இவர்களில் பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். கொழும்பு - கடற்கரை வீதியில் அமைந்துள்ள விடுதி அறையொன்றில் தான் இப்பெண்கள் ரூம் போடச் சொல்வது வழக்கம். இதனை அடுத்து குடிவரவு அதிகாரியே வாடிக்கையாளர் போலச் சென்று அவர்களை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
சுமார் 1 மணி நேரம் உல்லாசமாக இருக்க இவர்கள் , 30,000 ஆயிரத்தை அறவிடுவதாக கூறப்படுகிறது. கைதாகிய அனைத்துப் பெண்களிடமும் விசா இல்லை என்பது தெரியவந்துள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்