வங்கி ஊழியர்கள்…. வெளுத்துவாங்கிய நடிகை ரோஜா..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ஆம் தேதி முதல் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.
அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் தபால்நிலையங்கள் மற்றும் வங்கிகளில் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். இதன் காரணமாக பொதுமக்கள் வங்கிகள் மற்றும் தபால்நிலையங்களில் வெகுநேரம் காத்திருந்து பணங்களை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல நடிகையும், YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி மாவட்டத்தின் எம்எல்ஏவுமான ரோஜா சித்தூர் வங்கி கிளைக்கு தன்னுடைய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்றுள்ளார்.
ஆனால் அந்த வங்கி ஊழியர்கள் திடீரென்று பணம் இல்லை என்று கூறி No Exchange பலகையை வைத்துள்ளனர். இதனையடுத்து நடிகை ரோஜா அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் இது குறித்து பேசுகையில், இது ஒரு நல்ல திட்டம் தான் என்றாலும், இதில் எந்த ஒரு பணக்காரரும் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை , ஏழைமக்கள் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்