Header Ads

மைத்திரியை சந்தித்தது திருப்த்தி இல்லை -மாணவர்கள்



யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுப் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை தாங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றதும் சக மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால்இ மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று கூறிய யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.ரஜீவன், மாணவர்கள் நிராகரித்தால் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதில் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் தலைமையில் 16 பேர் கொண்ட மாணவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

எனினும் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த யாழ் பல்கலைக்கழ மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்றைய சந்திப்பு தொடர்பில் தமக்கு திருப்தியில்லை என தெரிவித்தனர். இவர்கள் கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கள ஊடகங்கள் இதனை முதன்மைப் படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.