Header Ads

வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி

 
 
 
கர்நாடகாவின் கலபுர்கியில் உள்ள கருனேஸ்வரி காலனியில் ரமாபாய் ஜாகிதார் கல்லூரியில் பியூ இரண்டாமாண்டு படித்து வந்தவர் சுதா. இவர் இந்த கல்லூரியில் அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.


இன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு வந்தார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாள் போட்டு கொண்டார். பின்னர் வகுப்பறையில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.