Header Ads

எய்ட்ஸ் நோய் வதந்தியால் சினிமாவில் இருந்தே விரட்டப்பட்ட நடிகர்..!



மைக் மோகன்..மறக்கமுடியுமா..? வெள்ளி விழா நாயகன்.இவர் நடித்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்ஸ்..! பாலுமகேந்திராவின் அறிமுகம்..நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை என ஆரம்பித்த மோகனின் சினிமா கேரியர் ஜிவ்வென பறந்தது..!

எண்பதுகளில் மோகன் இளையராஜா கூட்டணி பட்டையைக் கிளப்பியது..! ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரங்கள் நடித்தார்..! நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று மோகன் எண்ணிய போது தான் இவருக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்கிறது என்கிற செய்தி தீயாகப் பரவியது..! தொண்ணூறுகளில் எயிட்ஸ் நோய் என்றாலே அலறும் காலகட்டம்…! அவ்வளவு தான் ஆட்டம் க்ளோஸ்..! இவரைக் கண்டாலே ஹீரோயின்கள் பதறி, கதறி ஓட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடினர்.

இயக்குனர்கள் வீடுகளை  காலி செய்துவிட்டு வேறு ஏரியா போனார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளில் கதவு ஜன்னல்கள் எல்லாம் இழுத்து அடைக்கப் பட்டன..! மோகனும் வீட்டை விற்று விட்டு வேறு ஏரியா ஓடினார்..! சினிமா வாழ்கையே முடிந்து விட்டது. ஆனால் இப்போதும் மோகன் நன்றாகத்தான் இருக்கிறார். மோகன் இது குறித்து ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்தார்.எல்லாம் என்கூட தொடர்ந்து நாயகியாக நடித்த பூ—ன் நடிகை தான் காரணம்..

அவர் என்னை  திருமணம் செய்ய ஆசைப் பட்டார் நான் மறுத்தேன். இனி உன்னை யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்.. அந்தப் புண்ணியவதியால் சினிமாவில் இருந்தே விரட்டப்பட்டு விட்டேன்..வாழ்க வளமுடன் என்று நொந்து போய் சிரித்தார் ..!

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.