Header Ads

மறிச்சு மறிச்சு விசாரனை போராளிகள் பெரும் அச்சத்தில்



இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் போராளிகள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஒரு புறம் சிங்கள இனவாத அமைப்புக்கள் வடக்கில் ஏற்படுத்தப்பட்ட சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ள நிலையில். மறு புறம் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் தடுப்பில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்ப உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஒரு புறம் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோர் முன்னாள் போராளிகளை தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக கூறி மைத்திரிபால அரசாங்கம் விடுவிக்கப்பட்ட பல முன்னாள் விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மற்றும் போராளிகளை கைது செய்து எதுவித காரணங்களும் கூறாது நீண்டகாலமாக தடுத்துவைத்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் வெளியாவே இல்லை என்பது ஒரு மர்மம் தான். தற்போது கண்ட இடங்களில் எல்லாம், ராணுவ புலனாய்வாளர்கள் முன் நாள் போராளிகளின் உறவினர்களை மறித்து விசாரித்து பயமுறுத்தி வருகிறார்கள். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.