அமெரிக்க உளவுத்துறையின் 638 கொலை முயற்சியை முறியடித்து வாழ்ந்த காஸ்ரோ இறந்தார்
கியூப முன்னாள் அதிபர் பெடல் கேஸ்ட்ரோ தனது 90வது வயதில் காலமானார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து துணிச்சலாக செயல்பட்ட பெடல் கேஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்க உளவுத்துறை 638 முறைகளில் முயன்றது.
அவர் குடிக்கும் சிகரெட்டை வெடிக்க வைத்தது அமெரிக்க உளவுத்துறை. தப்பினார். விலைமாதுக்களை அனுப்பி கொலை செய்ய முயன்றது, தப்பினார். மதி மயங்கும் போதை வாயுவை செலுத்தி கொல்ல முயற்சி, விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சி என பல கொலை முயற்சிகள் பெடல் கேஸ்ட்ரோவிற்கு எதிராக அமெரிக்க உளவுத்துறையால் மேற்கொள்ளப்பட்டன. அனைத்தையும் முறியடித்து உயிர்வாழ்ந்த காஸ்ட்ரோ இயற்கையாக மரணமடைந்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்