உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 வயது மகன்..! தாய் காதலன் வீட்டில்
அமெரிக்க நாட்டின் மக்கள் தொகை அதிகம் இடங்களில் 5 வது இடத்தில் பிலடெல்பியா மாகாணம் கருதப்படுகிறது. இங்கு துப்பாக்கி கலாச்சாரமும் சற்று தலைதூக்கியே இருந்துவருகிறது.
இந்நிலையில், வடக்கு பிலடெல்பியா மாகாணத்தின் ஒரு வீட்டில் இருந்த 2 சிறுவர்கள் அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிஜ துப்பாக்கிகளை எடுத்துவந்து விளையாடிக்கொண்டுருந்தனர். இந்த விளையாட்டில் 2 வயது சிறுவனின் மார்பு பகுதியில் 4 வயது சிறுவன் சுடப்பட்டதில் அவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.
இதனைத்தொடர்ந்து, நேற்று 4.30 மணியளவில் செயிண்ட் கிரிஸ்டோபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தற்போது, ஆபத்தான நிலையில் இருந்து வருவதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவத்தின்போது சிறுவர்களின் தயார் தன்னுடைய காதலனுடன் வீட்டில் இருந்தது தெரியவந்தது. சிறுவர்கள் பயன்படுத்திகள் துப்பாக்கிகள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்