ஹிலரி வந்திருந்தால் 3ம் உலகப் போர் என்கிறார்
அமெரிக்க ஜனாதிபதியாக ஹிலரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டிருக்கக்கூடும் ரஸ்ஷா தெரிவித்துள்ளது. எனினும் ஜனாதிபதியாக ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளமையால் அது தடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் ஆலோசகர் செர்ஜி கிலாயேவ் தெரிவித்துள்ளார்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதை வரவேற்கிறோம். அமெரிக்காவின் முன்பு 2 வாய்ப்புகள் உள்ளன. இதில் முதல் வாய்ப்பு மூன்றாம் உலகப்போர். இரண்டாவது வாய்ப்பு உலக அமைதி. ஹிலரி கிளிண்டனைப் பொறுத்தவரை அவர் போரையே விரும்பினார். அவர் ஜனாதிபதியாகி இருந்தால் நிச்சயம் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டிருக்கும். ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் உலகப்போர் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதன் பின்னர் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்