மனைவி துணையோடு மகளுக்கு 15 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு
ஆஸ்திரேலிய நாட்டில் தனது மனைவியின் துணையுடன் பெற்ற மகளுக்கு 15 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 5 வயதான அந்த சிறுமியின் தாய் குழந்தையை பெற்றுக்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது தந்தை, செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், அந்த சிறுமியை முதல் முறையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவள் தப்பிச்செல்ல கூடாது என்பதற்காக ஒரு பெட்டியில் போட்டு அடைத்து, சுத்தி முள்கம்பிகளை கட்டிவைத்துள்ளார். தற்போது 24 வயதான அந்த பெண், இது குறித்து பேசுகையில், சுமார் 15 ஆண்டுகளாக நடக்கும் இந்த சம்பவம் என் தாய்க்கு தெரிந்தும் கூட அதை தடுக்காமல் என் தந்தைக்கு உதவியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், என்னை எனது பெற்றோர்கள் வாழும் நரகத்தில் வைத்திருந்ததாக கதறியபடி புகார் அளித்துள்ளார். இதை உடனடியாக விசாரித்த கோர்ட், அந்த தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவருக்கு துணையாக இருந்த ந்த பெண்ணின் தாய்க்கு 16 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்