கொட்டாஞ்சேனையில் காணாமல்போன இரு தமிழர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின
கொட்டாஞ்ச்சேனையில் இருந்து வெல்லம்பிட்டி நோக்கி தமது வேனில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயணிக்கும் போது கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்டவர்களின் தொலைபேசியை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வா கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
இது தொடர்பில் நேற்று முன்தினம் நீதிவானுக்கு சிறப்பு விசாரணை அறிக்கை ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தப்ப்ட்டு காணாமல் ஆக்கப்பட்ட இரு தமிழர்களில் ஒருவரான கொழும்பு மாநகர சபை ஊழியர் இரத்னசாமி பரமானத்தனின் கையடக்கத் தொலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டை ஒன்றும் வடிவேல் பக்கிளிசாமி லோகநாதனின் கையடக்கத்தொலைபேசியில் லெப்டினன் கொமாண்டர் தயாநந்தவின் பெயரில் இருந்த சிம் அட்டையும் கடத்தலின் பிற்பட்ட காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைவிட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள மேற்படி ஒருவரும் பயணித்த வேனானது 72 துண்டுகளாக பிரிக்கப்பட்ட நிலையில் வெலிசறை கடற்படை முகாமின் இரகசிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில், அவ்வேனானது அங்கு இவ்வாறு ஒழித்து வைக்கப்பட்டமையை அப்போதைய கடற்படை தளபதி வசந்த கருணாகொடவும் உளவுப் பிரிவின் பணிப்பாளர் கெப்டன் ஹேவகேயும் நன்கு அறிந்திருந்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வேன் புகைப்படமெடுக்கப்பட்டு கடற்படை தளபதி வசந்த கருணாகொடவுக்கும் கெப்டன் ஹேவகேக்கும் வெலிசறை முகாம் அதிகாரிகள் அனுப்பியுள்ள நிலையில் அதனை தாம் பார்த்துக்கொள்வதாக கருணாகொட தெரிவித்த நிலையிலேயே வேனானது இவ்வாறு துண்டுதுண்டுகளாக பிரிக்கப்பட்டு இரகசிய அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இது தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்த சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்ததாவது,
கனம் நீதிவான் அவர்களே, மேற்படி கடத்தப்பட்ட இருவரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறியே கடத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நாம் விசாரணை செய்தோம். அனைத்து உளவுப் பிரிவுகளிடமும் மேற்படி கடத்தப்பட்ட இருவர் தொடர்பிலும் அறிக்கை கோரினோம். கடற்படை மற்றும் விமானப்படை தவிர்ந்த ஏனைய உளவுப் பிரிவுகளின் அறிக்கை எமக்கு கிடைத்துள்ளன. அந்த அறிக்கைகள் மேற்படி இருவரும் எவ்வித பயங்கரவாத தொடர்புகளையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளன. அப்பாவி தமிழர்களை கடத்திக் கொலை செய்து. அவர்களின் தொலைபேசி சிம் கார்டைக் கூட பாவித்துள்ளார். பின்னர் கடத்தல் வேனை துண்டு துண்டாக வெட்டி மறைத்துள்ளார்கள் சிங்கள கடல்படையினர். இவை அனைதும் மகிந்த காலகட்டத்தி நடந்தவையே.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்