100 முறைக்கு மேல் மகளை பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்த தந்தை
சுவிட்சர்லாந்து நாட்டில் தந்தை ஒருவர் தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சுமார் 100க்கும் மேற்பட்ட முறை மகளை பலாத்காரம் செய்ததோடு அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்தார்.
கடந்த 2009ம் ஆண்டு கால்வின் நகரில் தெருவில் நடந்து சென்ற ஒருவருக்கு மெமரி கார்டு கிடைத்தது. அதில் தந்தை ஒருவர் தனது மகளை பலாத்காரம் செய்யும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதனை போலீசில் ஒப்படைத்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த நபரை ஸ்பெயினில் வைத்து கைது செய்தனர். தற்போது மாட்ரிட் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர் விரைவில் சுவிட்சர்லாந்து கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்