களத்தில் இறங்கிய மஹிந்த டீம்! அப்படி என்னதான் செய்தார்கள்?
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கு கூட்டு எதிர்க்கட்சி விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளது.
தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான சகல தகவல்களையும் கண்டறிவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்றை கூட்டு எதிர்க்கட்சி உருவாக்கியுள்ளது.
இதன்படி அனைத்து அமைச்சுக்களையும் உள்ளடக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் முதல் தமது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த அமைச்சுக்களின் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்காணிக்க உள்ளனர்.
ஊழல் மோசடிகள் குறித்து ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இந்த தகவல்கள் குறித்து நடத்தி நாட்டு மக்கள் முன் வெளிப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்