ஜப்பானில் மஹிந்த செய்துகொண்டிருக்கும் வேலைகளை பாருங்கள்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜப்பானில் உள்ள இலங்கையர்களுடன் ஒரு விசேட சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களை ஜப்பானில் உள்ள சுகுபா ( Sukuba) சர்வதேச மாநாட்டில் இன்று பிற்பகல் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, ரோஹித்த அபேகுணவர்தன, ஜயந்த சமரவீர, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஷன் ரணசிங்க உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ ஜூன் 10 ஆம் திகதி ஜப்பானிற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்