Header Ads

சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் வழக்கு ஒத்திவைப்பு..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வெளிநாடுகளை சேர்ந்த குற்றவாளிகள் சிலருக்கான தொடர்பு குறித்து கண்டறிய சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமையை 1997-ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்த முகமை, விசாரணையின் முன்னேற்றம் குறித்த ரகசிய அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சென்னையில் உள்ள முதலாவது கூடுதல் செசன்சு (தடா) கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சிறப்பு விசாரணை முகமை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிறையில் வாடும் என்னையும் தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பல தகவல்கள் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் மூல மனுவின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜராக வேண்டிய மூத்த வக்கீல் உடல்நலம் சரி இல்லாமல் உள்ளதால் வழக்கின் மீதான விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.