Header Ads

பரீட்சைப் பேப்பரில் காதல் வசனம் எழுதிய மாணவர்.. நடந்தது என்ன?

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வினாத்தாள்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சி.பி.எஸ்.இ. பாடதிட்டங்கள் மிக கடுமையாக இருப்பதால் அவற்றை மாணவர்கள் புரிந்து படித்து தேர்வு எழுதுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பலர் இதில் பெயிலாகி விடுகிறார்கள்.

இதற்கு பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலும் முக்கியமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட வயது வந்ததுமே அவர்கள் காதல் வலையில் விழுகிறார்கள். இதனால் படிப்பில் கவனம் சிதறி பரீட்சையை சந்திக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றும் சொல்கின்றனர்.

பரீட்சை எழுதும் போது கூட காதலியின் நினைவாகவே இருந்து பரீட்சை பேப்பரிலேயே காதல் வசனங்களையும் எழுதுகிறார்கள் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவர் ஒரு பக்கம் முழுவதும் காதல் வசனங்களை எழுதி வைத்திருந்தார். ‘ஐ லவ் யூ பூஜா’ என எழுதி இதயத்தின் படத்தையும் அதில் அம்புக்குறியையும் வரைந்து இருந்தார்.

அதில், எழுதி இருந்த வசனத்தில், நான் காதலில் விழுந்து கிடக்கிறேன். அவளை விட்டு என்னால் வாழ முடியாது. என்னை அவளுடன் வாழ விடுங்கள். இல்லை என்றால் நான் மரணம் அடைய அனுமதியுங்கள். எனது காதலால் என்னால் படிக்க முடியவில்லை என்று எழுதப்பட்டு இருந்தது.

சில மாணவர்கள் பரீட்சை பேப்பருடன் பணத்தையும் இணைத்து வைத்திருந்தனர். அதில், எனது பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள். எப்படியாவது என்னை பாஸ் செய்து வையுங்கள் என்று கேட்டு கொள்ளப்பட்டு இருந்தது.

ஒரு மாணவன் நான் பெயிலானால் எனது தந்தை என்னை கொன்று விடுவார். எனவே, பாஸ் மார்க் போடுங்கள் என்று எழுதி இருந்தார்.

மற்றொரு மாணவர் என்னை பெயிலாக்கினால் நான் தற்கொலை செய்து கொள்வேன். எனவே பாஸ் மார்க் போடுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இப்படி பலரும் பல விதமான தகவல்களை பரீட்சை பேப்பரில் எழுதி இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.