எஸ்.சி மற்றும், எஸ்.டி வன்கொடுமை சட்ட விவகாரம்.. எம்.எல்.ஏ. வீடுகளுக்கு தீவைப்பு..
எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை தளர்த்த வகை செய்யும் சில தீர்ப்புகளை சுப்ரீம் கோர்ட் வழங்கியிருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறிய சூழலில் 10 பேர் இதற்கு பலியாகினர்.
தொடர்ச்சியான இன்றும் ராஜஸ்தானில் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அவர்களிடமிருந்து கண்ணீர் குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், கரவ்லி மாவட்டத்தின் கிண்டான் நகரில் உள்ள தலித் எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜ்குமாரி ஜாதவ் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாரோசிலால் ஜாதவ் வீட்டினுள் நுழைந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கற்களை வீசினர். பின்னர் தீ வைத்தனர். இதில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்