Header Ads

வீட்டில் தூங்கிய இளம்பெண் மாயம்..

தவளக்குப்பம் திருமலை வாசன் நகரை சேர்ந்தவர் ஜப்பார். பழ வியாபாரி. இவரது மகள் பர்வீன் (வயது 19). இவர், 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பர்வீன் மறுநாள் காலையில் பார்த்த போது, மாயமானார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பர்வீன் இல்லை.

இதையடுத்து ஜப்பார் தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பர்வீனை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.