தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த சிறுவன்..
வடமதுரை இ.பி. காலனியைச் சேர்ந்த நடராஜ் மனைவி மீனா (வயது 43). இவர் சம்பவத்தன்று காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார் இதனை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நைசாக வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது தூங்கிக் கொண்டு இருந்த மீனாவின் ஆடைகளை அகற்றி சில்மிஷம் செய்து கொண்டு இருந்தான்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாவின் அண்ணன் முருகவேல் சந்தேகமடைந்து உள்ளே வந்து பார்த்த போது சிறுவனின் செய்கையை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவனை சத்தம் போட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் உருட்டு கட்டையால் முருகவேலை தாக்கினான்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த முருகவேல் திண்டுக்கல் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்