பெண்ணின் தொண்டையில் இருந்த புற்றுநோய் கட்டி வாய் வழியாக ஆபரேஷன் செய்து அகற்றம்..
ஆரணியை சேர்ந்தவர் ரதி (36). இவருக்கு குறட்டை மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம் இருந்து வந்தது.
கடந்த டிசம்பர் மாதம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் காது-மூக்கு- தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலை பரிசோதித்த போது தொண்டையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கட்டியின் மறுபக்கம் கழுத்தின் இடது புறத்தின் வெளிபக்கத்திலும் தொட்டு உணர முடிந்தது.
கட்டியை அகற்ற டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டு வாய் வழியாக கட்டியை அகற்ற முடிவு எடுக்கப்பட்டது.
சுவாசக் குழாயை பாதுகாத்திட முதலில் தொண்டையில் துளையிடப்பட்டது. பின்னர் வாய்வழியாக அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை செய்து முடிக்க 3 மணி நேரம் ஆனது. சதை பரிசோதனையில் அது புற்றுநோய் கட்டி என உறுதி செய்யப்பட்டது.
இந்த வகையான கட்டி அரியது. தொண்டையின் புறபகுதியில் வருவது மிகவும் அரியது. இவ்வளவு பெரிய கட்டி வாய் வழியாக அகற்றப்பட்டது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும்.
தனியார் மருத்துவமனையில் இந்த ஆபரேசனை செய்ய ரூ.5 லட்சம் வரை செலவாக வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் முதல்வர் பொன்னம்பல நமசிவாயம் தலைமையில், ஆர்.எம்.ஒ. ரமேஷ் முன்னிலையில் டாக்டர்கள் முத்து சித்ரா, கவுரி சங்கர், அதியமான், குமுதா லிங்க ராஜ், வாணி, லட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினரால் சிறப்பாக செய்து முடித்தனர். தற்போது ரதிக்கு நோயின் தாக்கம் முழுமையாக நீங்கியதையொட்டி நலமுடன் உள்ளார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்