தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் திடீர் தற்கொலை..
ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் ராதிகா ரெட்டி (வது 36). மூசாப்பேட்டையில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். வழக்கம்போல் நேற்று வேலைக்குச் சென்ற இவர் இரவில் வீடு திரும்பியுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ராதிகா ரெட்டி தற்கொலை செய்வதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமல்ல. எனது மூளையே எனக்கு எதிரி’ என ராதிகா குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பாக தன் கணவரை விவாகரத்து செய்த ராதிகா, அதன்பின்னர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
ராதிகா விவாகரத்துக்கு பிறகு பெற்றோருடன் வசித்து வந்தார். அவருக்கு மனநலம் பாதித்த 14 வயது மகன் இருக்கிறான்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்